தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் மறைவு - நெஞ்சுக்கு நீதி

மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் உடலுக்கு அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் மறைவு
முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் மறைவு

By

Published : Jul 4, 2021, 6:54 AM IST

Updated : Jul 4, 2021, 8:57 AM IST

திருச்சி : மருங்காபுரி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் புலவர்.பூ.ம.செங்குட்டுவன் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) காலை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது சொந்த ஊரான வேலக்குறிச்சியில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அப்துல் சமத், எம்.பழனியாண்டி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மருங்காபுரி எம்எல்ஏ

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் வேலக்குறிச்சியில் கடந்த 1941 நாளில் ஆண்டு பிறந்த செங்குட்டுவன் முதுகலை தமிழ் இலக்கியம் படித்தவர். புலவர் என்று கலைஞரால் அழைக்கப்பட்டவர். மருங்காபுரி திமுக ஒன்றிய செயலாளராக 7 முறை பதவி வகித்தவர். 1985 – 91 ஆண்டுகளில் மருங்காபுரி ஒன்றிய பெருந்தலைவராகவும் பதவி வகித்தார். 1996-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மருங்காபுரி சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்ற செங்குட்டுவன், திமுக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் மறைவு

மிசாவில் சிறை

இவருடைய பதவி காலத்தில் நகர் புறங்களில் மட்டுமே இருந்து வந்த காவிரி குடிநீர் கிராமப்புற பகுதிகளுக்கும் கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது. மிசா வழக்கில் கைது செய்யப்பட்ட செங்குட்டுவன் ஒரு வருட சிறைவாசம் சென்றவர் என்பதும், திமுக கட்சி சார்பில் சுமார் 60 முறை சிறை சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திமுக தலைவர் மறைந்த கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி புத்தகத்திலும் செங்குட்டுவன் பெயரை கலைஞர் குறிப்பிட்டிருந்தார் என்பது இவருக்கு புகழாரம்.

மீண்டும் திமுகவில்

கடந்த 2013-ஆம் ஆண்டு, திமுகவில் இருந்து அதிமுகவுக்கு சென்ற புலவர் செங்குட்டுவனுக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் பதவி அளித்தார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. பின் கடந்த பிப்ரவரி 25-ல் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, மகளிரணிச் செயலாளர் கனிமொழி, இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருடன் சென்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை மீண்டும் தி.மு.கவில் இணைத்துக் கொண்டார்.


கரோனா பாதிப்பு

கடந்த 1997-ல் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட செங்குட்டுவனுக்கு 2019 –ல் மீண்டும் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய செங்குட்டுவன், வியாழக்கிழமை(01.07.2021) அன்று முச்சு திணறல் ஏற்பட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இரவு வீடு திரும்பிய அவர் வேலக்குறிச்சி இல்லத்தில் சுமார் 9.25 மணியளவில் உயிரிழந்தார்.

இதையும் படிங்க : 'எதிர்காலம் குறித்த கவலை எனக்கில்லை' - கட்சித் தாவியவுடன் காலரை தூக்கி விட்ட பழனியப்பன்

Last Updated : Jul 4, 2021, 8:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details