திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. முன்னதாக, நேற்று (மே.20) மாலை மருத்துவமனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் ப.அப்துல்சமது, மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு உள்ளிட்டோர் மக்கள் நலப்பணிகள் இணை இயக்குநர் லட்சுமி, மருத்துவமனை முதன்மை மருத்துவர் முத்து கார்த்திகேயன், மருத்துவ அலுவலர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "கரோனா மூன்றாவது அலையே வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் அதற்கான கட்டமைப்புகளில் தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது. கரோனா தொற்றுக்கான மருந்தினை தமிழ்நாட்டிலேயே ஏன் உற்பத்தி செய்யக் கூடாது என்ற தொலைநோக்கு பார்வையில் தான் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
புதிய கல்விக்கொள்கை - ஒருமித்த கருத்து