தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒலிம்பிக் வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு - trichy latest news

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று திருச்சி விமான நிலையம் வந்தடைந்த இரு வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒலிம்பிக் வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு
ஒலிம்பிக் வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு

By

Published : Aug 7, 2021, 10:19 PM IST

திருச்சி: 2021ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் கலந்து கொண்டவர்களில் சுமார் 10 விழுக்காடு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தேசிய தடகள அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 26 பேரில், 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இதில் 3 பேர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். திருவெறும்பூரைச் சேர்ந்த சுபா, குண்டூரைச் சேர்ந்த தனலட்சுமி சேகர் ஆகிய இருவரும் 4x400 கலப்பு தொடர் ஓட்டப்போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இரு வீராங்கனைகளும் இன்று (ஆக. 7) மாலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தனர்.

அப்போது திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு, பொருளாளர் ரவிசங்கர், அமைப்பு செயலாளர் சுரேஷ் பாபு, உடற்கல்வி பயிற்சியாளர்கள் சுதாமதி ரவிசங்கர், டாக்டர். சத்தியமூர்த்தி, பயிற்சியாளர் மணிகண்ட ஆறுமுகம், குடும்பத்தினர், பொது மக்கள் உள்ளிட்டோர் வீராங்கனைக்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையும் படிங்க:நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசு- பிசிசிஐ!

ABOUT THE AUTHOR

...view details