தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்வாரிய ஊழியர் வீட்டில் கொள்ளை - காவல்துறை விசாரணை - trichy district news

திருச்சி: மணப்பாறை அருகே மன்வாரிய ஊழியர் வீட்டில் ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் கொள்ளை போனது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின் ஊழியர்
மின் ஊழியர்

By

Published : Feb 25, 2021, 7:49 AM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன்(37) திருச்சி சிறுகனூர் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் மணப்பாறை பொய்கை திருநகரில் வாடகை வீட்டுக்கு குடிபெயர்ந்தார். இந்நிலையில் நேற்று(பிப். 24) மாலை சரவணனின் தாயார் கைலாசம் அணியாப்பூர் சென்றுவிட்டு மகன் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, நாற்பதாயிரம் மதிப்புள்ள எல்.ஈ.டி டிவி, ஹோம் தியேட்டர், நிலத்தின் பட்டா, பேங்க் பாஸ்புக் உள்ளிட்டவை கொள்ளை போனது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து கைலாசம் அளித்த புகாரின் பேரில், மணப்பாறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சாந்தி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து ஐந்து பவுன் நகை, ஐந்தாயிரம் பணம் கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சிசிடிவி:பேக்கரி கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details