திருச்சி:மணல் வாரி துறை சாலை ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வருபவர், வேல்முருகன் (24). இதே பகுதியைச்சேர்ந்த பொறியியல் பட்டம் பெற்ற பல இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, கார்த்திக் என்ற பார்த்திபன் என்பவர் அங்கு விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களிடம் அறிமுகமாகியுள்ளார்.
அவர்களிடம் தான் மத்திய அரசில் உள்ள ஆதார் சேவையில் பணியாற்றி வருவதாகவும், தமிழ்நாட்டில் உள்ள அரசு பணிகளில் தன்னால் வேலை வாங்கித் தரமுடியும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பிய 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அவரிடம் பணம் கொடுத்து வேலை வாங்கித் தரக்கோரியுள்ளனர்.