திருச்சி:சென்னையில் உள்ள நகைக்கடைகளில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று (நவ.20) திருச்சி ஜாபார்ஷா தெருவில் உள்ள 4 நகைக்கடைகளில் நள்ளிரவு முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சின்னக் கடை வீதி, பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்கு ஐந்து கார்களில் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்து, நேற்று நள்ளிரவு முதல் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள ஜாபர்ஷா தெருவில் செயல்பட்டு வரும் ரூபி, சூர்யா, விக்னேஷ் உள்ளிட்ட மூன்று கடைகள் மற்றும் பெரிய கடை வீதியில் உள்ள சக்ரா செயின்ஸ் உள்ளிட்ட கடைகளிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.