தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக ஆட்சியில் அரசு ஐ.டி.ஐகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது - அமைச்சர் கணேசன் - திமுக ஆட்சி

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு அரசு ஐ.டி.ஐகளில் 93.79 விழுக்காடு மாணவர் சேர்க்கை நடந்துள்ளது என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கூறியுள்ளார்.

அமைச்சர் கணேசன்
அமைச்சர் கணேசன்

By

Published : Nov 2, 2022, 8:11 PM IST

திருச்சி மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 5ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் திருச்சியில் உள்ள எஸ்.சி.டி ஐ.டி.ஐயில் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ’தமிழ்நாட்டில் 66 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலமாக 1,04,000 இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்றுத்தந்துள்ளோம்.

வரும் 5ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தருவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஆண்டிற்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை முதலமைச்சர் பெற்றுத்தருவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு, அரசு ஐ.டி.ஐ களில் 93.79 விழுக்காடு மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. குறிப்பாக 51 அரசு ஐ.டி.ஐகளில் நூறு விழுக்காடு மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. அதற்கு முக்கியக்காரணம் நான் முதல்வன் திட்டம் தான். படித்தால் வேலை கிடைக்கும் என்கிற நம்பிக்கை இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ளது.

10,000 கட்டுமானத்தொழிலாளர்களுக்கு ரூ.400 கோடி செலவில் வீடு கட்டித்தர முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்கள். 2006-2011 ஆட்சிக்காலத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களாக 32 லட்சம் பேர் நல வாரியத்தில் பதிவு செய்திருந்தனர். அது கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் குறைந்து விட்டது. மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றபிறகு 10 லட்சம் பேர் நல வாரியத்தில் இணைந்துள்ளார்கள்.

1,07,000 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், கல்வி உதவித்தொகை, குடும்ப உதவித்தொகை, விபத்து உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு தான் அந்த நலத்திட்டங்களை வழங்கி உள்ளோம்' என்றார்.

திமுக ஆட்சியில் அரசு ஐ.டி.ஐகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது

இதையும் படிங்க:பரந்தூர் விமான நிலையம் வருவது, காலத்தின் கட்டாயம் - அமைச்சர் தங்கம் தென்னரசு

ABOUT THE AUTHOR

...view details