திருச்சிமாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள தெற்கு இருங்களூரில் போலி மதுபான பாட்டில்களைச் சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திருவரம்பூர் மதுவிலக்கு காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில் திருவரம்பூர் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி முத்தரசு தலைமையிலான காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தெற்கு இருங்களூரைச் சேர்ந்த சின்னப்பன் மகன் லாரன்ஸ்க்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் 90 அட்டைப் பெட்டிகளில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 4310 போலி் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
அதன் பின்னர் போலி மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் லாரன்ஸ், குப்புசாமி, உள்ளிட்ட மூவரைக் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.