திருச்சி: தமிழர் திருநாளாம் தைத் திருநாளான பொங்கல் பண்டிகையில் தவறாமல் இடம்பெறும் வழிபாட்டு பொருட்களில் ஒன்று மஞ்சள். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மஞ்சள் பயிரிடப்பட்டாலும், பயிரிடப்படும் மண்ணின் தன்மையால், திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட எட்டரை, கோப்பு, குழுமணி பகுதிகளில் விளைவிக்கப்படும் மஞ்சளுக்கு எப்போதும் தனிச் சிறப்பு உண்டு.
பருவ மழை, சந்தையில் விளை பொருட்களுக்குள்ள விலை நிலவரத்தின் அடிப்படையில் மஞ்சள் பயிரிடும் இப்பகுதி விவசாயிகள், கடந்தாண்டு மஞ்சள் நல்ல விலைக்குப் போனதால், இந்தாண்டு கூடுதலாக மஞ்சள் பயிரிட்டிருந்தனர். வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, ஜனவரி முதல் வாரத்தில் நடக்கும் மஞ்சள் அறுவடை தற்போது பெய்து வரும் தொடர் மழையால் தாமதமாகி வருகிறது. இதனால் மஞ்சளின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. வியாபாரிகளும் குறைந்த விலைக்கே மஞ்சள் கேட்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி பெரியசாமி கூறும்போது, "சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் விவசாயிகள் மஞ்சள் பயிரிட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையை மனதில் கொண்டு செய்யப்பட்ட மஞ்சள் பயிர்கள், தொடர் கனமழையால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மஞ்சள் கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகள் செடி ஒன்றுக்கு ரூ. 4 முதல் ரூ.6 வரை மட்டுமே வாங்கி செல்கின்றனர்.