தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போதையில் போலீசார் மீது தாக்குதல்.. திருச்சி போலீசார் வழக்குப்பதிவு - திருச்சி போலீசார் வழக்குப்பதிவு

திருச்சியில் மதுபோதையில் மனைவியை நடுரோட்டில் தாக்கிய கணவனை சமாதானப்படுத்த முயன்ற போலீசாரை அந்த நபர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 11, 2023, 7:21 PM IST

போதையில் போலீசார் மீது தாக்குதல்.. திருச்சி போலீசார் வழக்குப்பதிவு

திருச்சி மாவட்டம், மணிகண்டம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் வழக்கம்போல், மனைவியை அழைத்துக்கொண்டு வந்தபோது விக்னேஸ்வரன் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்நிலையில், தடுத்த பொதுமக்களையும் அவர் கடுமையாக வார்த்தைகளால் வசை பாடியுள்ளார்.

இதனிடையே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் விக்னேஸ்வரனை சமாதானப்படுத்தி என்ன நடந்தது எனக் கேட்டுள்ளனர். இருப்பினும் போலீசாரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட விக்னேஸ்வரன் ஒரு கட்டத்தில் போலீசாரையும் தாக்க முயற்சித்தார்.

தொடர்ந்து அவர் உச்சகட்ட மதுபோதையில் இருந்தததைத் தெரிந்துகொண்ட போலீசார், மதுபோதையில் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், கோபமடைந்த விக்னேஸ்வரன் போலீசாரை மீண்டும் தாக்க முயன்றார். இதனையடுத்து, உடனடியாக கூடுதலாக வரவழைக்கப்பட்ட போலீசார் அவரை கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதனைத்தொடர்ந்து அவருடைய மனைவி மற்றும் மைத்துனர் வரவழைக்கப்பட்டதோடு, விசாரணை நடத்திய பின் அவர் மீது வழக்குப்பதிவு செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு மதுபோதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தது மட்டுமல்லாமல், நடுரோட்டில் மனைவியை தாக்கியதும், சமாதானம் செய்ய வந்த போலீசாரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமில்லாமல் அவர்களையும் தாக்க முயன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ‘கல்விக்காக தான் வெள்ளையர்களை பெரியார் ஆதரித்தார்’ - ஆ. ராசா

ABOUT THE AUTHOR

...view details