தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போதை ஏறிப்போச்சு புத்தி மாறிப்போச்சு - திருச்சியை அலறவிட்ட ஆசாமி! - Half naked bath

திருச்சி உள்ள கண்டோன்மென்ட் சாலையில் மறைந்த பாரத பிரதமர் ஜவர்கலால் நேரு திரு உருவ முழு சிலை உள்ள செயற்கை நீரூற்றில் கஞ்சா போதையில் இருந்த ஒருவர் அரை நிர்வாணமாக குளித்ததால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்கள்.

போதை ஏறிப்போச்சு புத்தி மாறிப்போச்சு-போதை ஆசாமி
போதை ஏறிப்போச்சு புத்தி மாறிப்போச்சு-போதை ஆசாமி

By

Published : Jun 8, 2022, 7:45 PM IST

திருச்சிமத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள கன்டோன்மென்ட் சாலையில் சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் எதிர்ப்புறம் மறைந்த பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உருவச் சிலை உள்ளது. இந்தச் சிலையை சுற்றிலும் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது.

இதனை மாநகராட்சி கட்டுப்பாட்டில் நிர்வகித்து வருகிறது. அந்தப் பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிக அளவு காணப்படும். இந்நிலையில் அந்த செயற்கை நீரூற்றில் கஞ்சா போதையில் இருந்த ஒருவர், அரை நிர்வாணமாக குளிக்கத் தொடங்கினார்.

பின்னர் நேரு சிலை முன்பு வழிபட்டு மீண்டும் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தார். உச்சி வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக குளித்துக்கொண்டிருந்த போதை ஆசாமியை அப்பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் விரட்டினர்.

உடனே கீழே இறங்கி வந்து சற்று தூரம் நடந்து சென்றபோது, போதை தலைக்கேறியதால் நடுரோட்டில் உட்கார்ந்தார். இதனால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனைத்தொடர்ந்து இது குறித்து கன்டோன்மென்ட் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு வந்த போலீசார் அந்த போதை ஆசாமியை அப்பகுதியிலிருந்து விரட்டியடித்தனர்.

போதை ஏறிப்போச்சு புத்தி மாறிப்போச்சு-போதை ஆசாமி

இதையும் படிங்க:குடிபோதையில் பேருந்தின் மீது ஏறிய போதை ஆசாமி; வீடியோ வைரல்

ABOUT THE AUTHOR

...view details