திருச்சி டைமண்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் "க்ரியேட்டிவ் டிரா 2019" என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான ஓவிய போட்டி நடைபெற்றது. 7ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 100 பள்ளிகளை சேர்ந்த 900 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரை வர்ணம் தீட்டும் போட்டியும், 4 முதல் 6ஆம் வகுப்பு வரை சுற்றுச்சூழல் தலைப்பில் ஓவியப் போட்டியும், 7 முதல் 9ஆம் வகுப்பு வரை உலக அதிசயங்கள் குறித்த ஓவியப் போட்டியும் நடத்தப்பட்டது.
இறுதியில் வெற்றி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மூன்று பிரிவுகளிலும் முதல் பரிசாக தலா ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கமும், கோப்பையும் வழங்கப்பட்டது. அதேபோல் 2ஆம் பரிசாக இரண்டாயிரம் ரூபாய் ரொக்கமும், 3ஆம் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டது.
திருச்சியில் 900 மாணவர்கள் பங்கேற்ற ஓவியப் போட்டி தேசிய கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநர் ஜமீர்பாஷா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
இதையும் படிங்க: திருச்சியில் விவசாயிகள் தரையில் உருண்டு நூதனப் போராட்டம்