திருச்சி:மணப்பாறை அருகேயுள்ள மரவனூரை சேர்ந்த பெரியசாமி மகன் ஜெயபாலன் (28). இவருக்கும், அதே பகுதி சொக்கம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகள் திவ்யா (23) என்பவருக்கும் திருமணமாகி 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.
வரதட்சணை கொடுமை செய்த கணவர் கைது - மாமனார், மாமியாருக்கு வலை! - undefined
வரதட்சணை கொடுமை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்; தப்பிச் சென்ற மாமனார், மாமியாரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
![வரதட்சணை கொடுமை செய்த கணவர் கைது - மாமனார், மாமியாருக்கு வலை! dowry](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-13234791-623-13234791-1633115499433.jpg)
இதனிடையே கடந்த ஒரு வருடமாக திவ்யாவிடம் அவரது கணவர் ஜெயபாலன், மாமனார் பெரியசாமி, மாமியார் செல்வி ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான திவ்யா, கடந்த சில நாட்களுக்கு முன்பு மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், திவ்யாவின் கணவர் ஜெயபாலனை நேற்று கைது செய்த நிலையில், தலைமறைவான மாமனார் பெரியசாமி,மாமியார் செல்வி ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:காந்தி ஜெயந்திக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து செய்தி