தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2024 நாடாளுமன்ற தேர்தல்; டெல்டாவில் திமுகவின் வியூகம்; சிதம்பரம் தொகுதி யாருக்கு? - Congress allience party to capture

நெருங்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பல்வேறு திட்டங்களை திமுக தீட்டி வருகிறது. அந்தவகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் யார்? என்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலில் அருண் நேரு போட்டியிட உள்ளாரா? சிதம்பரம் தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும் என்பன உள்ளிட்டவற்றை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 14, 2023, 9:52 PM IST

திருச்சி:தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் (Parliament Election 2024) நடைபெற உள்ளதால், முன்கூட்டியே தேர்தல் பணிகளை மின்னல் வேகத்தில் தொடங்கியது 'திமுக'. முதல் கட்டமாக உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்டங்களிலும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து 40 - 40 என்ற அனைத்து நாடாளுமன்றத் தொகுதியையும் முழுமையாகக் கைப்பற்ற வேண்டும், அதற்கு திமுக தொண்டர்கள் உண்மையாக ஒற்றுமையாக உழைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்டாவை தக்கவைக்க திமுகவின் வியூகம்:இந்த‌ நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களை ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அதிலுள்ள ஒவ்வொரு மண்டல வாரியாக, வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) ஒருநாள் பயிற்சி பாசறைக்கூட்டம் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலில் டெல்டா மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) பயிற்சி பாசறைக் கூட்டம் வருகிற 26-07-2023 (புதன்கிழமை) அன்று திருச்சி, ராம்ஜி நகர், கருமண்டபம் என்ற இடத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்றுச் சிறப்புரையாற்றுகிறார்.‌

திருச்சியில் திரளும் திமுக:டெல்டா மண்டலத்துக்கு உட்பட்ட அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் மத்திய, தஞ்சாவூர் தெற்கு, திருச்சி தெற்கு, திருச்சி மத்திய, திருச்சி வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, புதுக்கோட்டை வடக்கு உள்ளிட்ட 15 கழக மாவட்டங்களின், மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்களது மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) அனைவரையும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளைச் செய்திட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி தொகுதியைக் கேட்கும் காங்கிரஸ்:இது குறித்து திருச்சி கலைஞர் அறிவாலய வட்டாரத்தில் பேசிய போது, 'கடந்த கால தேர்தலில், திருச்சி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருக்கு ஒதுக்கப்பட்டது. அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியைக் கேட்கிறது' எனத் தெரிவித்தனர்.

திருச்சியைப் பொறுத்தவரை வருங்காலத்தில் திமுகவைச் சேர்ந்த வேட்பாளர் தான் நிற்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அதேபோன்று, திருச்சி மாவட்ட 9 சட்டமன்றத் தொகுதிகளை திமுக முழுமையாகக் கைப்பற்றியது போல், மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய மாவட்டம் மட்டுமல்லாமல், டெல்டா மாவட்டங்கள் முழுவதுமாக கைப்பற்ற நிர்வாகிகள் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறோம்; நிச்சயம் வெற்றி பெறுவோம்‌‌ எனத் தெரிவித்தனர்.

அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் நேரு வேட்பாளரா?:அதேபோன்று, திமுக முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் மகன் அருண் நேருவைப் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடச் சீட்டு கேட்பதாகவும் அவருக்குச் சீட்டு ஒதுக்கப்பட்டால் அருண் நேருவை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என்றனர். மேலும், டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் 'உதய சூரியன்' சின்னத்தில் (DMK Rising Sun symbol) போட்டியிட வேண்டும். அதுபோன்று, நடந்தால் நிச்சயம் தமிழ்நாடு முழுவதையும் திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றும்; அதற்காகத் தொண்டர்கள் அனைவரும் உழைக்கத் தயாராக இருக்கிறோம் என நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கட்சித்தலைவர் அவர்களிடம் தெரிவிக்க இருப்பதாகத் தகவல் கூறினர்.

தேர்தலில் 40-க்கு 40 என்பதே திமுகவின் இலக்கு:மேலும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதால் அவற்றைச் சரி செய்யும் பணியில் மாவட்டச் செயலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில் அனைத்து கருத்து வேறுபாடுகளையும் தகர்த்தெறிந்து 40 - 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்றனர். டெல்டா மாவட்டத்தில் இருக்கக்கூடிய சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 2 முறையாக விடுதலை சிறுத்தை கட்சி தொல். திருமாவளவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி பெறக்காரணம்?:ஏனென்றால் அப்பகுதியில் அவருடைய ஆதாரவாலர்களின் வாக்குகள் அதிகமாக இருப்பதால், அவர் தொடர்ந்து இரண்டு முறை அதே இடத்தில் போட்டியிட்டார். ஆனால், இரண்டு முறையும் இக்கட்டான கட்டத்தில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

திருமாவளவனுக்கு அடுத்தது என்ன தொகுதி? திமுகவின் திட்டமென்ன?: ஆகையால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இருந்து சிதம்பரம் தொகுதிக்கு பதிலாக திருவள்ளூர் தொகுதி, சென்னையைச் சுற்றியுள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் நிச்சயம் போட்டிடுவார் என திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: DMK Files: பார்ட் 2 ரெடியா இருக்கு: 300க்கு மேல் பினாமிகள் உள்ளனர் - அண்ணாமலை!

ABOUT THE AUTHOR

...view details