திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி காந்தி மார்க்கெட், தாரநல்லூர், கீரக்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “12ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மருத்துவ கல்வியில் சேரலாம். நுழைவுத் தேர்வு வேண்டாம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது திமுகதான். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும் உயிரோடு இருந்தபோது நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் வர முடியவில்லை.
ஆனால், தற்போதுள்ள 2 அடிமைகள், பாஜக சொல்வதை கேட்க வேண்டும் என்பதற்காக பெற்றோர், ஆசிரியர், மாணவர்களை ஏமாற்றி நீட் தேர்வை கொண்டு வந்துள்ளனர். ஆண்டுதோறும் நீட் தேர்வால் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். நீட் தேர்வு பயிற்சிக்கு அதிக அளவில் செலவு செய்ய வேண்டியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மீண்டும் கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவராகும் கனவை ஸ்டாலின் நினைவாக்குவார். டெண்டர்களில் எடப்பாடி பழனிசாமி 6ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் செய்துள்ளார். தனது சம்பந்திக்கு டெண்டர் கொடுத்துள்ளார்.
அதிமுகவினரை பார்த்தாலே பாவமாக இருக்கிறது இறந்துபோன அமைச்சர் துரைக்கண்ணு உடலை மூன்று நாள்கள் உறவினரிடம் ஒப்படைக்காமல், 800 கோடி ரூபாய் பணம் கேட்டுக் கொண்டிருந்தனர். அமைச்சரின் உடலை வைத்து ஊழல் பணத்தை வாங்கிவிட்டு கொடுத்துள்ளனர். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது மோடிக்கு சவால் விட்டார். மோடியா இந்த லேடியா என்று கேட்டார். ஆனால் தற்போது அந்த அமைச்சரவையில் இருக்கும் ராஜேந்திர பாலாஜி அம்மா எல்லாம் சும்மா, மோடிதான் எங்கள் டாடி என்று கூறிவிட்டார். அதிமுகவினரை பார்த்தாலே பாவமாக இருக்கிறது" என்றார்.
இதையும் படிங்க:'நடிகர் சூர்யா குடும்பத்து திரைப்படங்களை திரையிட விருப்பமில்லை'