திருச்சி: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு. இவர் டிசம்பர் 12 அன்று பிறந்தநாள் விழா கொண்டாடினர். இதற்காக திருச்சியைச் சேர்ந்த திமுகவினர் பலரும் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பிளக்ஸ் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை நகரின் பல இடங்களில் ஒட்டினர்.
குறிப்பாக வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் திருச்சி நம்பர் 1 ரவுண்டானாவில் பிளக்ஸ் பேனர்களை வைக்கப்பட்ய்டிருந்தது. அதிலும் இவை சாலையை மறித்தும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ளது. மேலும் பிறந்தநாள் விழா முடிந்து மூன்று நாட்கள் ஆகியும், நீதிமன்ற உத்தரவை மீறி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்கள் இன்னும் அகற்றப்படாமல் அங்கேயே இருப்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.