தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சி உறுப்பினர் பதவிகளில் திமுக முன்னிலை! - திருச்சி ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சி உறுப்பினர் பதவிகளில் திமுக

திருச்சி: மொத்தம் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 8 இடங்களையும், 24 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளில் 17 இடங்களையும் திமுக கைப்பற்றியுள்ளது.

trichy
trichy

By

Published : Jan 3, 2020, 10:36 AM IST

தமிழ்நாட்டில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் நடைபெற்றது. கிராம ஊராட்சி உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஒன்றிய வார்டு கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு இத்தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 24 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளில் 17 இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக ஐந்து இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற விபரம்.

வார்டு 1 : தீபா.வார்டு 2: தமயந்தி. வார்டு 3: ராஜேந்திரன். வார்டு 4: கிருஷ்ணமூர்த்தி. வார்டு 5: சுந்தரராஜன். வார்டு 7: கிருத்திகா. வார்டு 9: ஜெயலட்சுமி.வார்டு 12: வளர்மதி. வார்டு 13: கண்ணன்.
வார்டு 14: தீபா. வார்டு 15: ஆதி நாயகி. வார்டு 16: கருணாநிதி. வார்டு 18: பாக்கியலட்சுமி. வார்டு 19: சரவணகுமார். வார்டு 21: தேக்க மலர். வார்டு 22: பாலசுப்பிரமணியன். வார்டு 23: சிவகுமார்.

அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற விபரம்.

வார்டு 6: ரவிச்சந்திரன். வார்டு 8: ரமேஷ். வார்டு 17:சவரி அம்மாள். வார்டு 20: செல்வராஜ். வார்டு 24: ராஜமோகன். வார்டு 24: காங்கிரஸ் கட்சி கிருஷ்ணகுமார் வெற்றி பெற்றுள்ளார். 10 வார்டு வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதைப்போல திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில், 8 ஊராட்சி ஒன்றியங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

திருவெறும்பூர் வார்டு எண்ணிக்கை 16:திமுக கூட்டணி 9 வார்டுகளில் வெற்றி. அதிமுக 4 வார்டுகளில் வெற்றி. சுயேச்சை வேட்பாளர்கள் மூன்று வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

மருங்காபுரி வார்டு எண்ணிக்கை 19: திமுக கூட்டணி 11 வார்டுகளில் வெற்றி. அதிமுக 8 வார்டுகளில் கூட்டணி வெற்றி.

தாத்தையங்கார்பேட்டை வார்டு எண்ணிக்கை 14:திமுக கூட்டணி 10 வார்டுகளில் வெற்றி. அதிமுக கூட்டணி 4 வார்டுகளில் வெற்றி.

மணப்பாறை வார்டு எண்ணிக்கை 17:திமுக கூட்டணி 10 வார்டுகளில் வெற்றி.அதிமுக கூட்டணி 3 வார்டுகளில் வெற்றி. சுயேச்சை வேட்பாளர்கள் 2 வார்டுகளில் வெற்றி. 2 வார்டுகளில் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

மணிகண்டம் வார்டு எண்ணிக்கை 14: திமுக 9 வார்டுகளில் வெற்றி. அதிமுக கூட்டணி 2 வார்டுகளில் வெற்றி. 2 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி. 10ஆவது வார்டு முடிவு அறிவிக்கப்படவில்லை.

முசிறி வார்டு எண்ணிக்கை 18:திமுக கூட்டணி 7 வார்டுகளில் வெற்றி. அதிமுக கூட்டணி 2 வார்டுகளில் வெற்றி. சுயேட்சை வேட்பாளர் ஒரு வார்டில் வெற்றி. 8 வார்டுகளில் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

அந்தநல்லூர் வார்டு எண்ணிக்கை 15:திமுக கூட்டணி 10 வார்டுகளில் வெற்றி. 5 வார்டுகளின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உப்பிலியாபுரம் வார்டு எண்ணிக்கை 15: திமுக கூட்டணி 6 வார்டுகளில் வெற்றி. அதிமுக, அமமுக கட்சிகள் தலா ஒரு வார்டுகளில் வெற்றி. சுயேட்சை 2 வார்டுகளில் வேட்பாளர்கள் வெற்றி. 5 வார்டுகளின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

துறையூர் வார்டு எண்ணிக்கை 19:திமுக கூட்டணி 6 வார்டுகளில் வெற்றி. அதிமுக கூட்டணி 3 வார்டுகளில் வெற்றி. சுயேட்சை வேட்பாளர் ஒரு வார்டில் வெற்றி. 9 வார்டுகளின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொட்டியம் வார்டு எண்ணிக்கை 19: திமுக கூட்டணி 11 வார்டுகளில் வெற்றி.அதிமுக கூட்டணி 6 வார்டுகளில் வெற்றி. சுயேட்சை வேட்பாளர் ஒரு வார்டில் வெற்றி. ஒரு வார்டில் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புள்ளம்பாடி வார்டு எண்ணிக்கை 15:திமுக கூட்டணி9 வார்டுகளில் வெற்றி.அதிமுக கூட்டணி 3 வார்டுகளில் வெற்றி. மூன்று வார்டுகளில் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மண்ணச்சநல்லூர் வார்டு எண்ணிக்கை 23:திமுக கூட்டணி 9 வார்டுகளில் வெற்றி. அதிமுக கூட்டணி 3 வார்டுகளில் வெற்றி. சுயேச்சை வேட்பாளர்கள் 2 வார்டுகளில் வெற்றி. ஒரு வார்டின் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

லால்குடி வார்டு எண்ணிக்கை 21:திமுக கூட்டணி 3 வார்டுகளில் வெற்றி. அதிமுக 4 வார்டுகளில் வெற்றி. சுயேட்சை வேட்பாளர்கள் 2 வார்டுகளில் வெற்றி. 12 வார்டுகளில் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வையம்பட்டி வார்டு எண்ணிக்கை 16:திமுக கூட்டணி 4 வார்டுகளில் வெற்றி. அதிமுக கூட்டணி 3 வார்டுகளில் வெற்றி. 9 வார்டுகளின் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மீதமுள்ள முசிறி, உப்பிலியாபுரம், துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, வையம்பட்டி ஆகிய 6 ஒன்றியங்களில் சில வார்டுகளில் இன்னும் இறுதி முடிவு அறிவிக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் திடீர் மரணம்!

ABOUT THE AUTHOR

...view details