தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மலைக்கோட்டை அர்ச்சகர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய திமுக - Trichy news

திருச்சி: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மலைக்கோட்டை கோயில் அர்ச்சகர்களுக்கு திமுக சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

மலைக்கோட்டை அர்ச்சகர்களுக்கு உதவிய திமுக
மலைக்கோட்டை அர்ச்சகர்களுக்கு உதவிய திமுக

By

Published : May 19, 2020, 3:50 PM IST

Updated : May 19, 2020, 7:50 PM IST

இந்தியாவில் கரோனா பரவலைத் தடுக்க நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டு படிப்படியாக வணிக நிறுவனங்கள் இயக்கபட்டு வருகின்றன.

இதில் வேலையிழந்து வருமானமற்று, ஏழை எளிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் நாடு முழுவதும் இவர்களுக்கு உதவி வருகின்றனர்.

இதில் திமுக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நாள்தோறும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுவரும் நிலையில், திருச்சி மாவட்ட திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலைக்கோட்டை கோயில் அர்ச்சகர்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கினார்.

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், தாயுமானவர்சாமி திருக்கோயிலைச் சேர்ந்த அர்ச்சகர்கள் கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட திமுக அலுவலகத்திற்கு அவர்களை அழைத்து, அரிசி, மளிகைப் பொருள்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

இந்நிகழ்வில் திமுகவின் பகுதி செயலாளர் மதிவாணனும் உடன் சில நிர்வாகிகளும் இருந்தனர்.

இதையும் படிங்க :வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை : 6 பேர் கைது

Last Updated : May 19, 2020, 7:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details