திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள கீழப்பொய்கைப்பட்டி பகுதியில் பழச்சாறு ஊறல் விற்பனை நடப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
கள்ளச்சாராயம் விற்ற திமுக பிரமுகர் கைது! - கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுக பிரமுகர்
திருச்சி: மணப்பாறை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்குத் தேவையான பழச்சாறுகள் வைத்திருந்த திமுக பிரமுகரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கள்ளச்சாராயம் விற்ற திமுக பிரமுகர் கைது!
இதையடுத்து, அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட காவல் துறையினர், திமுக பிரமுகர் சுரேஷ் என்பவரிடமிருந்து 60 லிட்டர் பழச்சாறும், ராஜன் என்பரிடமிருந்து 3 லிட்டர் பழச்சாறும் கைப்பற்றி தரையில் ஊற்றி அழித்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.