2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக கூட்டணி கட்சிகள் தயாராகிவருகின்றன, திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு என்று பிரத்யேக குழு அமைத்துள்ளது. இந்தக் குழு மாவட்டந்தோறும் சென்று கட்சியினரின் கருத்துகளைக் கேட்டுவருகிறது.
திமுக சார்பில் தேர்தல் அறிக்கை கருத்துக் கேட்பு கூட்டம் - Trichy DMK
திருச்சி: கலைஞர் அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

Trichy DMK
இந்த வகையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
குழுத் தலைவர் டி.ஆர். பாலு, கொள்கைபரப்புச் செயலாளர் திருச்சி சிவா, செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டனர். திருச்சியில் உள்ள திமுக நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் கோரிக்கை மனுக்களை நேரில் பெற்றனர்.