திமுகவை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றியவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான மறைந்த நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, திமுக சார்பில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், நாவலர் நெடுஞ்செழியன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நாவலர் நூற்றாண்டு விழா: உருவப் படத்திற்கு திமுகவினர் மரியாதை - திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு
திருச்சி: மறைந்த நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி திமுக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
dmk members tributes navalar nedunjezhiyan in his Centennial Celebration
திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சவுந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாநகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.