திருச்சி: மணப்பாறை அருகேயுள்ள மெய்யம்பட்டி வெள்ளாளர் குளத்தில் மணல் கொள்ளை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 23) காலை காவல் துணை கண்காணிப்பாளர் பிருந்தா உத்தரவின்பேரில், புத்தாநத்தம் காவல் உதவி ஆய்வாளர் சூர்யா தலைமையிலான தனிப்படையினர் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட லாரி அப்போது மணல் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டிருந்த ஜேசிபி, மணலோடு இருந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்த தனிப்படையினர், ஜேசிபி ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள நல்லூரை சேர்ந்த மாணிக்கம் மகன் பால்ராஜ்(30) என்பவரை கைது செய்தனர்.
மேலும், மணல் கொள்ளை தொடர்பாக காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், வடக்கு இடையபட்டியை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் கலைசெல்வியின் கணவர் நாகராஜ் என்பது தெரியவந்துள்ளது. மணல் கொள்ளை சம்மந்தமாக தலைமறைவான திமுக பிரமுகர் நாகராஜ், டிப்பர் லாரி ஓட்டுனர் புத்தாநத்தம் பகுதியை சேர்ந்த பாண்டியன், லாரி, ஜேசிபி உரிமையாளர் உள்ளிட்ட நான்கு பேரை புத்தாநத்தம் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘சார்பட்டா’ கபிலனுக்கு பெண் குழந்தை..!