தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினர்!

வாக்குச்சாவடிக்குள் மாலை 5 மணிக்கு மேல் கரோனா பாதிப்பு இல்லாதவர்களையும் வாக்களிக்க அனுமதிக்க கோரி காவல்துறையினருடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினர்
வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினர்

By

Published : Feb 20, 2022, 4:15 PM IST

திருச்சி :மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் நேற்று(பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. கடைசி ஒருமணி நேரம் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது.

இதையடுத்து, 5,6,15ஆவது வார்டுக்குட்பட்ட திருச்சி ரோடு, செவலூர் ரோடு, அத்திகுளம், தர்மலிங்கம் தெரு, சொக்கலிங்கபுரம், சிதம்பரத்தான் பட்டி, தோமாஸ் தெரு, சேதுரத்தினபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்கக் கூடிய இரண்டு வாக்குச்சாவடிகளை கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு, வெளிப்புற கதவுவை தேர்தல் அலுவலர்கள் மூடியுள்ளனர்.

காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினர்

அப்போது திமுகவினர் கரோனா தொற்று பாதிக்கப்படாத வாக்காளர்களும் தொடர்ந்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர், தேர்தல் விதிமுறைக்கு எதிராக வாக்குச்சாவடியின் கதவைத் திறந்து விடும்படி காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கிருந்த அதிமுக உள்ளிட்ட சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் திமுகவினர் அராஜகம் செய்வதாக கூறி அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர், அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினரை எச்சரித்து திருப்பி அனுப்பினர். இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கிய அதிமுக செயலாளரிடம் காவல்துறை விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details