தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழையால் தடைபட்ட திமுக பொதுக்கூட்டம் - KN nehru

திருச்சியில் திமுக ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. திடீர் மழையினால் பொதுக்கூட்டம் பாதியிலேயே தடைபட்டது.

திருச்சியில் திமுக ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
திருச்சியில் திமுக ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

By

Published : Jun 15, 2022, 11:18 AM IST

திமுக ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி ஜங்ஷன் விக்னேஷ் ஹோட்டல் அருகில் நடைபெற இருந்தது. அக்கட்சியின் முன்ணனி பேச்சாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்தனர்.

நிகழ்ச்சியில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, பட்டிமன்ற நடுவர் லியோனி, ஆகியோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

திருச்சியில் திமுக ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

இந்நிலையில் கே.என்.நேரு பேசி முடித்தவுடன் மழை பெய்ய தொடங்கியது. மழை பெய்ததால் கூடியிருந்த தொண்டர்கள் ஓட்டம் பிடிக்க பொதுக்கூட்டம் பாதியிலேயே தடைபட்டது.

இதையும் படிங்க: அதிமுக ஒன்றிய செயலாளர் மீது கொலை முயற்சி

ABOUT THE AUTHOR

...view details