திமுகவின் முன்னாள் மாநில இளைஞரணி துணை செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான மறைந்த அன்பில் பொய்யாமொழியின் 21ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (ஆகஸ்ட் 28) அனுசரிக்கப்படுகிறது.
அதையொட்டி, திருச்சி கிராப்பட்டி அன்பு நகர் இல்லத்தில் உள்ள அவரது உருவப் படத்திற்கு திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, திருச்சி தெற்கு மாவட்ட திமுக மாவட்ட அலுவலகத்தில், அன்பில் பொய்யாமொழியின் உருவப் படத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கட்சி நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன்போது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.சேகரன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், வண்ணை அரங்கநாதன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.