திருச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
சொந்த நாட்டு மக்கள் மத்தியில் மதரீதியான பிரச்னையை ஏற்படுத்தி தனி நாட்டை உருவாக்கி லட்சக்கணக்கான மக்களை கொன்ற பாவத்திற்காக காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இன்று இளைஞர்கள் தெருவுக்கு வாருங்கள் என தமிழுக்கு ஆதரவாகவும், இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போலவும் திமுகவினர் பேச ஆரம்பித்துள்ளனர்.
இஸ்லாமிய மக்கள் திமுகவினரை நம்ப வேண்டாம். திமுகவின் நிலைப்பாடு மாற ஆரம்பித்துள்ளது. அவருடைய கட்சியில் 90 விழுக்காடு இந்துக்கள் உள்ளனர். இதை இஸ்லாமியர்கள் கவனிக்கவேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்களிடம் கையொப்பம் வாங்குவதிலும் திமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே இரட்டை வேடம் போடக்கூடிய திமுகவை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வெளிநாட்டவர் திமுகவிற்கும் காங்கிரஸுக்கும் துணையாக இருந்து போராட்டங்களை தூண்டி வருகிறார்களா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பொன். ராதாகிருஷ்ணன் பதிலளிக்கையில், அப்படி இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. திமுக அறிவாலயத்தில் ஜின்னாவின் ஆவி புகுந்து திமுகவினருக்கு போராட்டங்களை தூண்டும்படி குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தி.மு.க.விற்கு இனி எதிர்காலமே கிடையாது: செல்லூர் ராஜு