திருச்சி:பாரதிய ஜனதா அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் புத்தூர் நால்ரோட்டில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது அவர் திமுக ஆட்சியில் தமிழ்நாடு பின்னோக்கி ஓடிக் கொண்டிருப்பதாகவும்; லஞ்சம், கொலை , கொள்ளை அதிகரித்து விட்டதாகவும் குற்றஞ்சாட்டி பேசினார்.
இந்தியை படித்தால் சூத்திரர்களாகி விடுவோம் என தி.மு.கவை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன் கூறி இருக்கிறார்; இது திமுகவின் கீழ்தரமான சிந்தனையை காட்டுகிறது, திமுக ஜாதியை வைத்து கொண்டு பிழைப்பு நடத்தும் கட்சி என்று அண்ணாமலை சாடினார்.