திருச்சி மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, புதிதாக நியமனம்செய்யப்பட்ட திருச்சி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தியாகராஜன், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சிறப்பு வேளாண் மண்டலங்களாக இணைக்க வேண்டும். ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும். உள்கட்சித் தேர்தலைச் சிறப்பாக நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் கூட்டத்தில் கே.என். நேரு பேசுகையில், "மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்ற பின்பு பல அவமானங்களைச் சந்தித்துள்ளேன். அதனால்தான் தற்போது முதன்மைச் செயலாளர் என்கிற நிலைக்கு வந்துள்ளேன் (அவ்வாறு பேசும்பொழுது கே.என். நேரு கண் கலங்கினார்).