தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கையில் உள்ள தமிழர்களை விரட்டியடிக்க திமுக சதி - பாஜக குற்றச்சாட்டு - இலங்கையுடன் கை கோர்த்து சதி செய்யும் திமுக

திருச்சி: இலங்கையில் மீதமுள்ள தமிழர்களையும் விரட்டியடித்து பௌத்த பூமியாக மாற்ற திமுக சதி செய்கிறது என்று பாஜக மாநிலச் செயலாளர் ராகவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ragavan
ragavan

By

Published : Dec 20, 2019, 4:03 PM IST

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்தும் திமுகவின் நிலைப்பாட்டை கண்டித்தும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் ராகவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர்.

இதனைத் தொடர்ந்து, மாநிலச் செயலாளர் ராகவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், "தமிழ்நாட்டில் திமுக மக்களை மத ரீதியாக இந்தியர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று பிரதமரும் உள் துறை அமைச்சரும் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள், அகதிகளாக வந்தவர்களைத்தான் இந்தச் சட்டம் கட்டுப்படுத்தும்.

இந்த ஒப்பந்தம் ஏற்கனவே லியாகத் அலியும் ஜவஹர்லால் நேருவும் செய்துகொண்டது. இந்தியாவின் இந்த வாக்குறுதியைதான் மோடி தற்போது நிறைவேற்றியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அவர்களது சொத்துகள் சூறையாடப்பட்டன. அவர்களை மீண்டும் கவுரவமாக இலங்கையில் குடியமர்த்ததான் மோடி திட்டங்களை மேற்கொண்டுவருகிறார்.

இதற்காகத்தான் 50 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் மீண்டும் தங்களது தாய் நாட்டிற்குச் செல்ல விரும்புகிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டால், இலங்கையில் மீதமுள்ள தமிழர்களும் ராஜபக்ச அரசால் விரட்டியடிக்கப்படுவார்கள். ராஜபக்சவுடன் திமுக கைகோத்துக் கொண்டு, இலங்கையை முழு பௌத்த பூமியாக மாற்றும் சதிக்கு துணைபோகிறது.

மத்திய அரசின் சட்டங்களை மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இதில் மாநில முதலமைச்சர்கள் தலையிடவோ, தடுத்து நிறுத்தவோ அதிகாரம் கிடையாது" என்றார்.

இதையும் படிங்க: திருமா, சித்தார்த் உட்பட 600 பேர் மீது வழக்குப் பதிவு!

ABOUT THE AUTHOR

...view details