தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல்: திமுக கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்ட தொகுதி உடன்பாடு! - திமுக கூட்டணி தொகுதி உடன்பாடு

திருச்சி: முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தலைமையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சி திமுக கூட்டணி கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.

DMK Alliance Seat Announcement in Local Body elections
DMK Alliance Seat Announcement in Local Body elections

By

Published : Dec 12, 2019, 7:02 PM IST

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி வார்டு உறுப்பினர், தலைவர் என 4,177 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக வரும் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், ஐஜேகே உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை, சில தினங்களாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் நேரு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.


அதன் விவரம் வருமாறு:

  • காங்கிரஸ் கட்சிக்கு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு 2 இடங்களும், ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு 10 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • மதிமுகவுக்கு ஒரு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியும், 7 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியும் அறிவிக்கப்பட்டது.
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியும், 8 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியும் அறிவிக்கப்பட்டது.
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி அறிவிக்கப்பட்டது.
  • விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
    திருச்சி திமுக கூட்டணி கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு

இந்த அறிவிப்பின் போது கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர். அப்போது நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில், ''முன்பு அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஆனால், தற்போது 5,6 ஒன்றியங்களை ஒன்றிணைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கடந்த முறை நடந்ததுபோல் இல்லாமல், இந்த முறை தேர்தல் அலுவலர்கள் சரியாக வேலை செய்ய வேண்டும். சரியாக வேலை செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சட்டப் பாதுகாப்பு கேட்டு தான், உச்ச நீதிமன்றத்தை திமுக நாடியது. தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் திமுகவுக்கு கிடையாது'' என்றார்.

இதையும் படிங்க: கருத்துக் கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை

ABOUT THE AUTHOR

...view details