தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி: அதிமுக நல்ல முடிவை தருவார்கள் - பிரமேலதா விஜயகாந்த் அதிமுகவிடம் வலியுறுத்தல்

திருச்சி: தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதில் அதிமுக நல்ல முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

premalatha
premalatha

By

Published : Feb 28, 2020, 7:14 PM IST

திருச்சியில் தினமலர் பங்குதாரர் மறைந்த ராகவனின் மனைவி சுப்புலெட்சுமி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். இதற்கு அதிமுக தலைமை நல்ல முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

ராகவன் மனைவி சுப்புலெட்சுமிக்கு அஞ்சலி செலுத்திய பிரேமலதா

குறிப்பாக, குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி.யால் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்காகத்தான் இத்தகைய சட்டங்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும். சி.ஏ.ஏ. சட்டத்தால் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு என்றால் அவர்களுக்காகக் களத்தில் இறங்கும் முதல் கட்சியாகத் தேமுதிக இருக்கும்" என்றார்.

இதையும் படிங்க: 2 நாள்களில் 2 திமுக எம்எல்ஏக்கள் மறைவு: பேரவையில் எண்ணிக்கை குறைவு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details