திருச்சி மத்திய சிறை வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்காடியில், சிறைவாசிகள் தயாரித்த இனிப்பு, கார வகைகளும், கைவினைப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சிறை அங்காடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு சிறைவாசிகளால் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட, காற்று சுத்தீகரிப்பு பைகள் (Air purification bag) விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. தீபாவளி சிறப்பு விற்பனையை திருச்சி சரக சிறைத்துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.