தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சர்ப்ரைஸ் ரோந்து போன மாவட்ட காவல் கண்காணிப்பாளர்! - undefined

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் சுமார 100 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் இரவு ரோந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சர்ப்பரைஸ் ரோந்து போன மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
சர்ப்பரைஸ் ரோந்து போன மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

By

Published : May 9, 2022, 2:40 PM IST

Updated : May 9, 2022, 2:48 PM IST

திருச்சி:குற்றச் சம்பவங்களை குறைக்க வேண்டியும், சாலை விபத்துக்களை தடுக்க வேண்டியும் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சர்ப்பரைஸ் விசிட் அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார்.

பகல் வேளைகளில் இப்படி பயணம் மேற்கொள்வது இவரது வாடிக்கை. ஆனால் கடந்த சனிக்கிழமை(மே8) திடீரென ராம்ஜிநகர், இனாம்குளத்தூர், மணப்பாறை காவல் நிலையங்களையும் இரவு ரோந்து வாகனங்களையும் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சர்ப்பரைஸ் ரோந்து போன மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

இரவு 10.30 மணிமுதல் அதிகாலை 4.30 மணி வரை மாவட்டத்தில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டு, இரவு பணி காவலர்களுக்கு பல்வேறு இடங்களில் அறிவுரை வழங்கியிருக்கிறார். அடடே எஸ்.பி சைக்கிளில்லேயே போறாரு வர்றாரு என ஆச்சர்யப்பட்டனர் காவலர்களும் பொது மக்களும்..! அதே நேரத்தில் இதுவே வேலையாக இருப்பதா? என காவல்துறை வட்டாரத்தில் சலிப்பான பேச்சுக்களும் தென்படுகின்றன.

இதையும் படிங்க :பெண்ணின் கையை பிடித்து இழுத்த அரசு அதிகாரி - அடித்து உதைத்த பொதுமக்கள்!

Last Updated : May 9, 2022, 2:48 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details