தமிழ்நாடு

tamil nadu

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் திருச்சி ஆட்சியர் சிவராசு

By

Published : Feb 5, 2021, 4:27 PM IST

திருச்சி: மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சிவராசு கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

தடுப்பூசி போட்டுக்கொண்டார் மாவட்ட ஆட்சியர் சிவராசு
தடுப்பூசி போட்டுக்கொண்டார் மாவட்ட ஆட்சியர் சிவராசு

தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி போடும் முகாம் கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இதையடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

அதே போல் மாவட்ட ஆட்சியர் சிவராசுவும் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "தடுப்பூசி போட வருவாய்த்துறையினர் 1,362 பேர் பதிவு செய்துள்ளனர். மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 100 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் இதுவரை 4,342 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலத்தில் 50 விழுக்காடு இலக்கு எட்டப்படும். கரோனா தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: 2 ஆயிரத்து 834 மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்படும் - மாவட்ட ஆட்சியர் பொன்னையா

ABOUT THE AUTHOR

...view details