தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சதி' - கலங்கும் நேரு - Trichy West constituency candidate K N Nehru

திருச்சி மேற்குத் தொகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் துறையினருக்கு பணப்பட்டுவாடா செய்ததாக, திமுக வேட்பாளர் நேருவின் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார்.

'என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சதி' -  கலங்கும் நேரு
'என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சதி' - கலங்கும் நேரு

By

Published : Mar 28, 2021, 7:40 AM IST

திருச்சி: திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் திருச்சி மாவட்டத் தேர்தல் அலுவலருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "திருச்சி மேற்குத் தொகுதியில் தேர்தலை நிறுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, சமூக வலைதளங்களில் காவல் துறையினருக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டிருப்பதாகவும் அதற்கு என்னை தொடர்புபடுத்தியும் செய்தி வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலருக்கு கே என் நேரு எழுதிய கடிதம்

எனது புகழை களங்கப்படுத்துவதற்காக இப்படி வேண்டும் என்றே திட்டமிட்டு பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. உடனே இதுபோன்ற வதந்திகளைத் தடுக்க வேண்டும். வதந்தி பரப்புவோர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details