திருச்சி மண்டலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக டாஸ்மாக் பணியாளர்கள் 52 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்தப் பணி நீக்க உத்தரவை எதிர்த்து பணியாளர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் 52 பேருக்கும் ஆறு வார காலத்தில் மீண்டும் பணி நியமனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவினை மதிக்காமல் டாஸ்மாக் நிர்வாகம் செயல்பட்டுவந்துள்ளது. இதனால், உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படும் டாஸ்மார்க் நிர்வாகத்தை கண்டித்து, அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகம் முன்பு இன்று காலை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.