தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் திருவிழா கோலாகலம் - மணப்பாறை

திருச்சி: மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

temple

By

Published : May 12, 2019, 9:59 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டின் திருவிழா கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

இந்நிலையில், இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுக்கும் விழா இன்று நடைபெற்றது. காலை நான்கு மணிக்கு வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து தொடங்கிய பால்குடம் முக்கிய வீதிகளின் வழியாக மாரியம்மன் கோயிலை வந்தடைந்தது.

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

இதில், மணப்பாறை சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், கரும்பில் தொட்டில் கட்டி அதில் குழந்தைகளை வைத்தும் கோயிலை வலம் வந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். மேலும், திருவிழாவிற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு பல்வேறு இடங்களில் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details