தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அண்மையில் ஏழு சாதி உள்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில் முதலமைச்சரின் அறிவிப்புத் தொடர்பாக அரசாணை வெளியிடக் கோரி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் குருச்சந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயம் ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர்.