மருத்துவ கல்வியில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவிலான நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த தேர்வுகளை நடத்த அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இளைஞர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் - திருச்சி மாவட்ட செய்திகள்
திருச்சி: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஜங்சன் ரயில் நிலையம் முன்பு இளைஞர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அந்த வகையில் தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வினால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நீட் தேர்வை கொண்டு வந்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தின் சார்பில் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் முன்பு நடந்த இளைஞர் இயக்கத்தின் ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.