ரயில் நிலையங்கள், ரயில்கள் உள்ளிட்டவற்றை தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு ரயில்வே தொழிலாளர்கள் மட்டுமின்றி மத்திய தொழிற் சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்! - ஊழியர்கள் எதிர்ப்பு
திருச்சி ரயில்வே ஜங்சன் அருகே ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திபோது ரயில்வேயில் புதிய பணி நியமனத்திற்கு விதிக்கப்பட்டத் தடையை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் லெனின் தலைமை வகித்தார். சமூக இடைவெளியுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.