திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததைக் கண்டித்தும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை திருச்சிக்கு அனுப்பி வைப்பதைக் கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பாக பொன்மலை தியாகிகள் தினமான இன்று (செப்.06) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மருத்துவர்கள் இல்லாத அரசு மருத்துவமனை - ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் - Trichy District Manapparai
திருச்சி : போதிய மருத்துவர்கள் இல்லாமல் பொது மக்களை அலைக்கழிக்கும் அரசு மருத்துவமனையைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு மருத்துவமனையில் பல் மருத்துவர், தோல் மருத்துவர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும். பழைய மருத்துவமனையில் இயங்கி வரும் மனநல மருத்துவமனைக்கு நிரந்தரமாக மருத்துவரை நியமிக்க வேண்டும், செவிலியர்களை நியமிக்க வேண்டும். அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு தலைமை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க புறநகர் மாவட்ட தலைவர் P.பாலு தலைமை வகித்தார். மேலும் விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் துணை செயலாளர் கண்ணன், வட்டத் தலைவர் ஆவா. இளையராஜா உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்டோரும் கலந்து கொண்டனர்.