தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறார்கள் - துரை வைகோ குற்றச்சாட்டு

ஆளுநர் ஆர்.என் ரவியை பதவி நீக்கம் செய்ய கோரி மதிமுக சார்பாக திருச்சியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது இதற்கு துறை வைகோ தலைமைதாங்கினார் இதனையடுத்து பேசிய துரை வைகோ கையெழுத்து இயக்கத்திற்கு எங்களின் கூட்டணி கட்சிகள் அனைவரும் ஆதரவு தெரிவிக்கிறார்கள் பொது சிவில் சட்டம் மூலமாக குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு தான் பாஜக அது குறித்து பேசி வருகிறது என்றார்.

demanding-the-dismissal-of-governor-rn-ravi-signature-movement-at-mdmk
மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறார்கள் துரை வைகோ குற்றச்சாட்டு

By

Published : Jun 28, 2023, 9:19 PM IST

மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறார்கள் துரை வைகோ குற்றச்சாட்டு

திருச்சி:தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவரை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் மதிமுக சார்பில் நடைபெற்று வருகிறது. திருச்சியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் மதிமுக முதன்மைச்செயலாளர் துரை வைகோ தலைமை தாங்கி சிந்தாமணி அண்ணா சிலை அருகே கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். பிறகு, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய துரை வைகோ, ''தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழகத்துக்கும் கேடு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி செயல்பட்டு வருகிறார். தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களையும் தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் சட்டமன்றத் தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்.

கடந்த காலங்களில் ஆன்லைன் சூதாட்டத் தடைச்சட்டம் முதல் பல்வேறு விஷயங்கள் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். இரண்டு ஆண்டுகளாகப் பட்டமளிப்பு விழா நடைபெறாததால் 9.20 லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னேறி இருப்பதற்குக் காரணம் கல்வி தான். ஆனால், தமிழ்நாட்டில் கல்விக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார். அது தொடர்பாக நாங்கள் எல்லாம் குரல் எழுப்பியும் எந்தவிதப் பதிலும் ஆளுநர் தரப்பில் இருந்து வரவில்லை.

இதுபோன்ற பல விவகாரங்களில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கையெழுத்து இயக்கம் தொடங்கி உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் கூட்டணி இயக்கங்கள் துணையோடு இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறோம்.

இந்தியா என்பது பல்வேறு சாதிகள், இனங்கள், மதங்கள், மொழிகள் பின்பற்றி வாழும் மக்களைக் கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமை என்கிற அடிப்படையில் வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு வேட்டு வைக்கும் வகையில் பொது சிவில் சட்டம் தொடர்பாக பிரதமரின் கருத்து இருக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அம்பேத்கர் கொண்டு வந்தது. இந்தியாவில் வாழும் பலதரப்பட்ட மக்களை அவர்களின் வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு தான் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார். மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகத் தான் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம் என பாஜக கூறுகிறார்கள்.

நாட்டில் விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் அதிக அளவு உள்ளது. மணிப்பூரில் ஒரு மாத காலமாக கலவரம் நடந்து வருகிறது. இதற்கெல்லாம் பதில் கூறாமல் பிரதமர் இருக்கிறார். பொது சிவில் சட்டம் மூலமாக குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு தான் பாஜக இதுகுறித்துப் பேசி வருகிறார்கள்.

ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்க வேண்டும் என ம.தி.மு.க சார்பில் நடக்கும் கையெழுத்து இயக்கத்திற்கு எங்களின் கூட்டணிக் கட்சிகள் அனைவரும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். தி.மு.க.வினர் எங்கள் கையெழுத்து இயக்கத்திற்கு முழு ஆதரவு அளித்து வருகிறார்கள், முதலமைச்சர், அமைச்சர்கள் கையெழுத்துப் போடவில்லை. ஆனால் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என அனைவரும் கையெழுத்து போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், எங்கு போட்டியிடுவது என்பது குறித்தும் எங்கள் கட்சியின் தலைமையும் எங்கள் கூட்டணி தலைமையும் தான் முடிவெடுக்கும்'' என்றார். திருச்சியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் மதிமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:காணொலி மூலம் ஆஜரான செந்தில் பாலாஜி பேசியதென்ன?

ABOUT THE AUTHOR

...view details