தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 26, 2020, 10:02 PM IST

ETV Bharat / state

தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு பொதுக்கல்லறை ஒதுக்கித் தரக் கோரிக்கை!

சென்னை: மாநிலம் முழுவதும் கிறிஸ்தவர்களுக்கென்று பொதுக்கல்லறையை ஒதுக்கித் தரவேண்டும் எனக் தமிழ்நாடு அரசுக்கு சிறுபான்மை மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

public cemetery for Christians
vpublic cemetery for Christians

சிறுபான்மை மக்கள் நலக் கட்சி சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள உணவு விடுதியில் நடந்த இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் சாம் ஏசுதாஸ் கலந்துகொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "இந்துத்துவா, ஆர்எஸ்எஸ் அமைப்புகளை தவிர்த்து இணைந்து செயல்படக் கூடிய தன்மை உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டது.

பட்டியலின கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதன் வழக்கை முடித்து உடனே நிறைவேற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும் கிறிஸ்தவர்களுக்கான பொது கல்லறைகளை நகரங்களிலும், கிராமங்களிலும் மாநில அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு விரோதமான எந்தத் திட்டத்தையும் மக்களோடு துணை நின்று எதிர்த்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையிலும், இயேசுவை தவறாக சித்தரிக்கின்ற, பேசுகின்ற, எழுதுகின்ற எவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி சட்டப்படியான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொதுக்கல்லறை ஒதுக்கித் தர கோரிக்கை

புனித வெள்ளி, கிறிஸ்துமஸ் பண்டிகையை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சிறுபான்மை மக்கள் நலக் கட்சி 234 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் தனித்து போட்டியிட்டு சிறுபான்மை மக்களின் காண்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க:வாக்குக்கு 'மது, பணம், இலவசம்' இல்லாத தேர்தல் நடத்த முடிவு - தேர்தல் ஆணையம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details