திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 22அம் தேதி முதல் தொடங்கி நடைப்பெற்று வரும் நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு வரும் ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக வந்திருந்தார்.
முன்னதாக கருடாழ்வார் சன்னதி, மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, உற்சவர் சன்னதிகளில் தரிசனம் செய்துவிட்டு திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு தாயார் சன்னதியில் தரிசனம் செய்ய உள்ளே சென்றவுடன் தாயார் சன்னதி கதவை மூடிவிட்டனர். தாயாரை தரிசனம் செய்ய வந்த பக்தர்களை உள்ளே விடாமல் 9 மணிக்கு மேல் வாருங்கள் நடை சாத்தபட்டது என கூறி பக்தர்களை அனுப்பி வைத்த கோவில் பணியாளர்களால் பக்தர்கள் ஏமாற்றதுடன் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘திருக்கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் பக்தர்களுக்கு தேவையான வசதியை மேற்கொள்வது குறித்த முதலமைச்சரின் உத்தரவிற்கு ஏற்ப திருவிழா காலம் குறித்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்ததாகவும், வைகுண்ட ஏகாதேசி முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி என்று நடைபெற உள்ளது அன்று செய்ய வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்து ஏற்கனவே விரிவான அறிக்கை தாக்கல் மாவட்ட ஆட்சியரின் சார்பில் அழைக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.