தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம்!

திருச்சி: மணப்பாறை அருகே உள்ள காட்டுப் பகுதியில் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

men

By

Published : Aug 23, 2019, 6:15 PM IST

Updated : Aug 23, 2019, 6:40 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கொ.சத்திரம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில், 45 வயதுடைய ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மரத்தில் தொங்கி காணப்பட்டது. அப்பகுதியில், கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விராலிமலை காவல் துறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொங்கிய நிலையில் கிடந்த சடலம்
இந்நிலையில், அடித்து தொங்கவிடப்பட்டதா? அல்லது தற்கொலையா? என பல்வேறு கோணங்களில் விராலிமலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Aug 23, 2019, 6:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details