திருச்சி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி மொத்தம் 68 பேர் முன்னதாக சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 66 நபர்கள் பூரண குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், கரோனாவிலிருந்து மீண்டு பூரண குணமடைந்து, இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தற்போது திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு பேர், ரயில்வேயின் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் ஒருவர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், என மொத்தம் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தின் கரோனா நிலவரம் குறித்து பேசிய அம்மாவட்ட ஆட்சியர் சிவராசு, ”மருத்துவமனையில் உள்ள அனைவரும் நலமுடன் உள்ளனர். ஆனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். விழித்திரு, விலகி இரு, வீட்டில் இரு என்பதைக் கடைபிடிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தை கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:வேலையின்றி தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை