தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடியாப்பம் மேக்கரில் வைத்து தங்கம் கடத்தல் - ஏர் இந்தியா விமானம்

திருச்சி விமான நிலையத்தில் இடியாப்பம் மேக்கர் மூலம் கடத்திவரப்பட்ட ரூ.44 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இடியாப்பம் மேக்கரில் தங்கம் கடத்தல்
இடியாப்பம் மேக்கரில் தங்கம் கடத்தல்

By

Published : Dec 16, 2022, 9:07 PM IST

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பல விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் வரும் பயணிகள், தங்கம் கடத்தி வருவதும் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சார்ஜாவில் இருந்து இன்று (டிச.16) ஏர் இந்தியா விமானம் திருச்சி விமான நிலைத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை வழக்கம் போல் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு பெண் பயணியின் உடமைகளை சோதனை செய்தனர்.

அதில், இடியாப்பம் மேக்கர் மிஷினில் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 811 கிராம் எடை கொண்ட 44 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 500 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை விற்பனையை சமூக வலைதளப் பதிவின் மூலம் தடுத்த டிஜிபி

ABOUT THE AUTHOR

...view details