தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்கள் ஊரடங்கை மீறிய கடை உரிமையாளர்கள்: கண்டுகொள்ளாத காவல் துறை!

திருச்சி: நேற்றைய மக்கள் ஊரடங்கின்போது கடை உரிமையாளர்கள் சிலர், அலட்சியப் போக்குடன் மீறி மாலை நேரத்தில் கடையைத் திறந்து வியாபாரம் செய்தனர்.

திருச்சி செய்திகள்  கரோனா தொற்று சுய ஊரடங்கு  curfew violation in trichy
சுய ஊரடங்கை மீறிய கடை உரிமையாளர்கள்: கண்டுகொள்ளாத காவல்துறை

By

Published : Mar 23, 2020, 9:29 AM IST

கரோனா நோய் தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் ஊரடங்கை கடைபிடிக்கவேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார். அதன்படி நாடு முழுவதும் நேற்று மக்கள் ஊரடங்கிற்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கினர்.

மண்பாறையில் காலையிலிருந்து மூடப்பட்டிருந்த சில கடைகளை அரசின் உத்தரவை மீறி அதன் உரிமையாளர்கள் மாலை நேரத்தில் திறந்து வியாபாரத்தை மேற்கொண்டனர். காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த நிலையிலும், மணப்பாறை பேருந்துநிலையம், கோவில்பட்டி சாலை, மதுரை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

மக்கள் ஊரடங்கை மீறிய கடை உரிமையாளர்கள்: கண்டுகொள்ளாத காவல்துறை

உலகமே கரோனா வைரஸால் பெரும் பாதிப்படைந்து கொண்டிருக்கும் நிலையில், மத்திய மாநில அரசுகள் வைரஸ் குறித்த எச்சரிக்கை விடுத்தும் அதன் தீவிரம் அறியாமல் ஒரு சிலர் செயல்படுவது பெரும்பாலன மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:கரோனா பரவாமல் தடுக்கு அயராது உழைப்பவர்களுக்கு கைதட்டி பொதுமக்கள் நன்றி

ABOUT THE AUTHOR

...view details