தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி என்ஐடி ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி - கரோனா தடுப்பூசி செய்திகள்

திருச்சி: என்ஐடி ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

கரோனா செய்திகள்
கரோனா

By

Published : Apr 22, 2021, 10:14 PM IST

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் சார்பில் கோவிட்-19 பணியிட தடுப்பூசி முகாம், இன்-கேம்பஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இங்கு 45 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி முகாமை இன்று நிறுவன இயக்குநர் டாக்டர் மினி ஷாஜி தாமஸ், பதிவாளர் டாக்டர் அறிவழகன் மற்றும் மருத்துவமனை ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் ஜே.ஹேமலதா முன்னிலையில் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர், 'தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது மற்றும் அவசியமானது. நான் ஏற்கனவே தடுப்பூசி எடுத்துக்கொண்டேன்' என ஊழியர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார்.

கரோனா தடுப்பூசி

2 நாட்களுக்கு நடைபெறும் தடுப்பூசி இயக்கத்தின் போது 200 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 30 நிமிடம் கண்காணிக்கப்படுகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, அவர்களுக்கு தற்காலிக தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details