திருச்சி : மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக, பிஜேபி, நாம் தமிழர், அமமுக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 132 பேர் போட்டியிட்டனர்.
இன்று (பிப்.22) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் திமுக எட்டு வார்டுகளிலும்,மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஒரு வார்டிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு வார்டுகளிலும், அதிமுக 11 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் ஐந்து வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தம்பதி அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 19ஆவது வார்டில் வெற்றி பெற்ற தங்கமணி மற்றும் 20ஆவது வார்டில் வெற்றி பெற்ற மனோன்மணியும் கணவன் மனைவி. இவர்களைப் போல் 1969 ஆண்டு தேர்தலில் பஞ்சாலை தொழிலாளியான வி.பெருமாள் அவரின் மனைவி ராஜம் (எ) சுப்புலெட்சுமி வெற்றி பெற்று முதல் நகர் மன்றத்தில் தம்பதியாக கலந்து கொண்டனர்.
அதன்பிறகு தற்போது ஐம்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்து கணவன் மனைவியாக வென்று நகர் மன்றத்திற்கு செல்கிறார்கள். இதையடுத்து வெற்றி சான்றிதழ் பெற்றுக்கொண்டு இருவரும் காந்தி, பெரியார், அண்ணா மற்றும் காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க : வெற்றி இலக்கை எட்டிய இளம் வேட்பாளர்கள்!